தமிழ்

ஓடிசம் என்பது நரம்பு மண்டலத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடாகும்.இக்குறைபாடு சிறுவயது முதல் பிள்ளைகளில் காணப்படுகின்றது.இக்குறைபாடு உள்ளவர்களை அதாவது ஓடிசம் உள்ளவர்களை தமிழில் தற்சிந்தனையாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். ஓடிசம் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவதற்கு எந்தவித பரிசோதனைகளும் பயனளிக்காது.அவ்வாறு ஏதாவது ஒரு பரிசோதனை செய்வோமாயின்(MRI ,Brine Scan ,Hearing Test,Ext…)பரிசோதனையின் முடிவு சாதாரண பிள்ளைகளுக்கு கிடைக்கும் முடிவேயாகும். இப்பிள்ளைகள் தோற்றத்தில் சாதாரண பிள்ளைகளே.ஆனால் இவர்களின் நடத்தை அல்லது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். ஓடிசம் உள்ள பிள்ளைகளின் சில குணாதிசயங்கள்… கண்ணோடு கண்பார்த்து கதைக்க மாட்டார்கள். பெயர் சொல்லி அழைக்கும் போது அதை பொருட்படுத்த மாட்டார்கள். மற்ற பிள்ளைகளுடக் சேர்ந்து விளையாடும் தன்மை குறைவாக காணப்படும். சிலர் அர்த்தம் இல்லாமல் ஏதேதோ பேசுவார்கள். சிலர் கதைக்கவே மாட்டார்கள்.ஆனால்  இவர்கள் ஊமையல்ல. சிலவேளைகளில் தேவயற்று அழுவார்கள் ,சிரிப்பார்கள். கூடுதலாக தனிமையையே விரும்புவார்கள் அவர்களுக்கு பிடித்த விளையாட்டை மட்டும் திரும்பத்திரும்ப விளையாடுவார்கள். உதாரணமாக கைகளை அசைத்தல்,உடலை முன்னும்பின்னுமாக அசைத்தல்,துள்ளுதல்,மேலும் பல அசைவுகள் காணப்படும்.ஆனால் ஏதாவது ஒரு உடல் அசைவுகளை எந்த நேரமும் மேற்கொள்வார்கள். ஆரம்பத்தில் கதைக்கத் தொடங்கி திடீரென இரண்டு வயதை அடையும் போது பேச்சு இல்லாமல் போய்விடும். முக்கியமாக இப்பிள்ளைகள் நேரம் இடம் யார்எவர் என்ற வித்தியாசம் உணரமாட்டார்கள். இங்கு நாம் குறிப்பிடும் விடையங்கள் மாத்திரமைின்றி இன்னும் பல செயற்பாடுகள் இப்பிள்ளைகளில் காணப்படும்.அப்பிள்ளைகள் பற்றி முழுமையாக அறிவதற்று எமது இணையத்தளத்திலுள்ள தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக குறிப்பிடவேண்டிய விடையம் ஓடிசம் பிள்ளைகளை உடைய பெற்றேர்கள் மிகவும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் பல ஏற்படுகிறது.ஏனெனில் இப்பிள்ளைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகான பிள்ளைகள்.ஆனால் நாம் முன்பு குறிப்பிடப்பட்டது போல அவர்கள் பழக்க வழக்கங்கள் வேறுபட்டு காணப்படும்.இதன் காரணமாக சமூகம் பெற்றேரை குறை சொல்லும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.அதனால் பெற்றோின் மனதளவில் பாதிக்கப்படுவது மட்டுமின்றி தமது பிள்ளைகளை வெளியில் கூட்டிச்செல்வதை நிறுத்திவிடுகின்றனர்.இதனால் இப்பிள்ளைகள் மேலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆனால் CHILD IS NOT A PROBLEM,CHILD HAS A PROBLEM அதாவது பிள்ளை இங்கு பிரச்சனையில்லை பிள்ளைக்கு பிரச்சனை இருக்கிறது. என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். ஓடிசம் பிள்ளைகளின் விகிதாசாரம் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.அண்மையில் பெறப்பட்ட ஆய்வுகளின் படி 63 பிள்ளைகள் பிறக்கும் போது அதில் ஒரு பிள்ளை ஓடிசம் குறைபாட்டுடன் பிறக்கிறது.இதற்குரிய தகுந்த காரணங்கள் உலகளாவிய ரீதியில் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.எனவே இவ்வகையான பிள்ளைகள் யாருக்கும் எந் நேரத்திலும் பிறக்கலாம்.எனவே எல்லோரும் ஓடிசம் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதுடன் இக் குறைபாடுடைய பிள்ளைகளை  வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இயலுமான உதவிகளை செய்ய வேண்டும். OSILMO AUTISM CENTER ஒடிசம் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றொரருக்கும் ஓர் ஆறுதல் அளிக்கக்கூடிய இடம் மாத்திரமன்றி எமது உலகத்தில் பிறந்து வேறு ஓர் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது சிறார்களை எமது உலகத்திற்கு கொண்டுவருவதற்காக அளப்பரிய சேவைகளை முழுமனதுடன் செய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினரால் முதன்முதலாக அமைதியாக தொண்டாற்றும் உத்தம மனிதன் எனும் தொனிப்பொருளில் இலங்கை பூராகவும் இன மத மொழி என்ற வேறுபாடு இல்லாது பல்லாயிரக்கணகிலான சேவை செய்பவர்களை தேர்ந்தெடுத்து அதில் ஒருவருக்கு உயரிய விருதாகிய V விருது வளங்கப்பட்டது. அதில் எமது நிறுவன ஸ்தாபகராகிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த DR. சின்னையா தேவானந்தனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. OSILMO நிறுவனம் யாதி, மாத இன பேதமின்றி இலங்கை மட்டுமன்றி உலகிலுள்ள எல்லா ஒடிசம் குழந்தைகளுக்கும் ஒரு நிழலாக விழங்குகிறது. OSILMO இன் அடிப்படை நோக்கம் சாதரண பிள்ளைகள் பெறும் எல்லா வசதிகளையும் ஒடிசம் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக Dr.சின்னையா தேவானந்தாவின் எதிர்காலத்திட்டமான  இலங்கையில் உலகில் எந்த ஒரு இடத்திலும் இல்லாதது போன்ற அழகான ஒடிசம் கிராமம் ஒன்றை அமைப்பதற்கு உரிய அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் இவ்வாறான Autisum பிள்ளைகளை சிகிச்சை எனும் போது இப் பிள்ளைகளை 24 மணித்தியாலக்கும் எமது பார்வையின் கீழ் வைத்து தகுந்த பயிற்சிகளை வளங்குவதன் மூலம் எதிர்காலத்தில் நான் Autisum ஆக இருந்தேன் என்பதையே மறக்க செய்து சாதாரண பிள்ளையாக மாற்றுவதற்கு இந்த கிராமம் உலகிலேயே மிகவும் முக்கிய இடமாக விளங்கும்.